Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை அதிகம் சாப்பிடாதீங்க….!! ஏன் தெரியுமா…?? இதை படியுங்கள்…!!

சர்க்கரை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகின்றன என்று பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சர்க்கரை உணவுகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். குளிர்பானங்கள், கேக்கு வகைகள், பலகார வகைகள் மற்றும் மிட்டாய் போன்ற பல வகையான உணவுகளை தினமும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சராசரியாக ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 6 டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டடும். ஆனால் இதை விட அதிகமாக சர்க்கரை ஒருவர் எடுத்துக் கொள்ளும் போது அது பல உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து:

1.அதிகமாக சர்க்கரை சேர்த்த உணவுகளை சாப்பிடும்போது பற்களில் சிதைவு ஏற்படுகிறது.

2. சர்க்கரையை சற்று அதிகம் சாப்பிடும் போது லெப்டின் தடையை உண்டாக்கும். இது உடல் எடை கட்டுப்பாட்டுக்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது.

3.இதில் அதிகளவில் கலோரிகள் நிரம்பியுள்ளதால் உங்கள் பசியை தனிக்க சர்க்கரை உணவுகள் சிறிதும் உதவாது.

4.இனிப்பான பானங்களை அதிகம் உட்கொள்ளும் போது நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

5.அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும்.

6. சர்க்கரை சேர்த்த உணவுகள் சாப்பிடும் போது கொடிய வகை புற்றுநோய்களில் ஒன்றான கணைய புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.

7. மேலும் சர்க்கரை சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

எனவே சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது நட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.

Categories

Tech |