நேற்று லண்டனில் நடைபெற்ற பயிற்சிபோட்டி குறித்து ஜடேஜா பேசியது இந்திய அணி ரசிகர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியானது உலகக் கோப்பைக்கு இந்திய அணி விளையாடுவதற்கான முதல் போட்டி தான், இந்த ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆகையால் இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார் .
மேலும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வந்து விளையாடும் பொழுது இந்தப் பிட்ச் சற்று கடினமானதாக உள்ளது. இது குறித்து ஆலோசித்து கடுமையான பயிற்சிகளை இந்திய அணி மேற்கொள்ள இருக்கிறது. இனிவரும் போட்டிகளில் அருமையாக விளையாடுவோம் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா உறுதியளித்துள்ளார்.