Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தம்பின்னு கூட பார்க்கல… மதுவினால் ஏற்பட்ட விளைவு… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி…!!

ராமநாதபுரத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சொந்த அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பம்மனேந்தல் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்தி(27) மற்றும் ராஜேஷ்(23) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் வேலைபார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நேற்று காந்தி மற்றும் ராஜேஷ் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவறுகளுக்கு தகராறு ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த காந்தி மதுபோதையில் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் ராஜேஷை வெட்டியுள்ளார். இந்நிலையில் படுகாயமடைந்த ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் காந்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கமுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பியோடிய காந்தியை கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |