டெல்லியில் வெளியில் இருந்தவர்களுக்கு டெல்லி போலீஸ் ரோஜாப்பூ கொடுத்த சம்பவம் மக்களிடையே விழிப்புணரவை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள்.
இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வெளிநாட்டுப்பயணி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூட்டமாக செல்வதை தடுக்கும் வகையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கபிட்டு இருந்தாலும் இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதைத்தொடர்ந்து இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வீட்டில் இருக்காமல் வெளியே இருந்த நபருக்கு டெல்லி போலீஸ் ரோஜாப்பூ கொடுத்த அறிவுரை வழங்கியது. வீட்டுக்கு சென்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வெளியே இருந்த நபருக்கு டெல்லி போலீஸ் அறிவுரை சொன்ன சம்பவம் பொதுமக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.