Categories
சினிமா தமிழ் சினிமா

“பழச மறக்கக் கூடாது”….. குரு நாதரின் காந்தாரா படத்தால் ராஷ்மிகாவுக்கு வந்த சிக்கல்.‌…. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. அதன்பிறகு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில், பாலிவுட் சினிமாவில் இருந்தும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இந்நிலையில் படங்களில் நடிப்பது மற்றும் சுற்றுலா எனப் படு பிசியாக இருக்கும் ராஷ்மிகாவிடம் சமீபத்தில் ரசிகர் ஒருவர் காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்று ராஷ்மிகா கூறிவிட்டு செல்லும் ஒரு வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரஷ்மிகாவை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர். அதாவது காந்தாரா திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் உட்பட மத்திய மந்திரிகள் வரை பாராட்டியுள்ளனர்.

அதன் பிறகு காந்தாரா திரைப்படத்தில் நடித்த ரிஷப் செட்டி தான் கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். தன்னை முதன் முதலாக படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனரின் படத்தை ராஷ்மிகா பார்க்காதது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஒரு இரண்டு மணி நேரம் கூட தன்னுடைய குருநாதரின் படத்தை பார்ப்பதற்கு ஒதுக்க முடியாதா என்று நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகிறார்கள். அதன்பிறகு கிரிக் பார்ட்டி படத்தில் நடித்த நாயகனை ராஷ்மிகா காதலித்து அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் வரை நடைபெற்றது.

ஆனால் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகாவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இதனால் சினிமாவில் ராஷ்மிகா முழு கவனத்தையும் செலுத்தியதால் திருமணம் பாதியிலேயே நின்று போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா கன்னட சினிமாவை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற ஒரு பேச்சும் எழுந்துள்ளது.

இதனையடுத்து காந்தாரா திரைப்படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து வரும் நிலையில் நடிகர் ரிஷப் செட்டிக்கு ராஷ்மிகா ஒரு வாழ்த்தையாவது தெரிவித்து இருக்கலாம் என நெட்டிசன்கள் ஆதங்கத்தோடு கூறி வருகிறார்கள். பழசை மறந்து விடக்கூடாது மற்றும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க கூடாது என்றெல்லாம் கூறி வருகிறார்கள். மேலும் காந்தாரா படம் குறித்த சர்ச்சையின் காரணமாகத்தான் சமீபத்தில் ராஷ்மிகா இன்ஸ்ட்டாவில் மிகவும் வருத்தப்பட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |