“எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்” என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பு நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது. வாகனம் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்டார்ட்அப் தொழில்கள் அதிகரித்து வருகின்றன. புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் ஐஐடி சென்னை சிறப்பான இடம் வகிக்கிறது.