Categories
உலக செய்திகள்

தங்கம் வேண்டாம்…. ”தக்காளி கொடுங்க”…. பாகிஸ்தானில் விநோதத் திருமணம்…!!

திருமணத்தில் மணப்பெண்ணைத் தங்கத்தினால் அலங்காரம் செய்யாமல் தக்காளியால் அலங்கரித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப நாட்களாகத் தக்காளி உற்பத்தி குறைந்து காணப்படுவதால், தக்காளியின் விற்பனை விலை அதிகளவில் ஏறியுள்ளது. இதனால், மக்கள் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு இந்திய மதிப்பில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது.

தனது நாட்டின் தற்போதைய நிலைமையை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், இளம்பெண் தனது திருமணத்தின் வாயிலாக புதிய முயற்சியில் ஈடுபட்டார். அவர், தங்கத்துக்குப் பதிலாக தக்காளியால் தன்னை அலங்காரம் செய்திருந்தார். மணப்பெண்ணின் கை, கழுத்து, தலை என அனைத்துப் பகுதிகளிலும் தக்காளியை ஆபரணங்கள் போல் அணிந்திருந்தார்.

இந்த தகவலறிந்த உள்ளூர் செய்தி நிறுவனம், திருமணத்தில் மணப்பெண்ணிடம் பேட்டி எடுத்தனர். அப்போது, ‘தங்கத்தின் விலை மதிப்பு அதிகம் தான். ஆனால், தற்போது தக்காளி மற்றும் பைன் நட்ஸ் விற்பனை விலை அதிகமாகியுள்ளது. இதனால்தான், தக்காளியை அணிந்துள்ளேன்’ எனத் தெரிவித்தார்.திருமணத்தின் மற்றொரு முக்கிய அம்சம், மாப்பிள்ளை வீட்டிற்குத் திருமணத்தில் வைத்து மூன்று கூடைத் தக்காளி, பைன் நட்ஸ் சீர் ஆக வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உலகளவில் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

https://twitter.com/nailainayat/status/1196512658440278018

Categories

Tech |