Categories
மாநில செய்திகள்

“படிப் படின்னு சொல்லி பிரஷர் கொடுக்காதீங்க”….. எங்க அம்மா என்ன அப்படித்தான் டார்ச்சர் பண்ணும்…… உதயநிதி அட்வைஸ்…..!!!!!

முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும் பள்ளியின் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவர் சன்ஷைன் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியின் ஆண்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது‌. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டவர் களிடம் பேசினார்‌.

அவர் பேசியதாவது, எங்களுடைய வீட்டில் நாங்கள் அனைவரும் பயப்படுவது எங்களுடைய அம்மாவுக்கு மட்டும்தான். எங்கள் அம்மா மிகவும் கண்டிப்பானவர். அப்படிப்பட்ட கண்டிப்பான என்னுடைய அம்மாவை என்னுடைய தங்கை செந்தாமரையை பார்த்து பயப்படுவார்‌‌. என் தங்கை ரொம்ப ஸ்டிரிட். பெற்றோர்கள் மாணவர்களை படி என்று கூறி டார்ச்சர் பண்ணாதீங்க. மேலும் என்னுடைய அம்மா இப்படி தான் படிக்கச் சொல்லி என்னை டார்ச்சர் செய்தார் என்று கூறினார்‌.

Categories

Tech |