Categories
மாநில செய்திகள்

”தனியாருக்கு கொடுக்காதீங்க” உடனே கைவிடுங்க…. ட்வீட் போட்ட TTV…!!

இரயில்வே துறையை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டுமென்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைத் தனியார்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகள் அந்தப் போக்குவரத்தை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்துவதில் தவறில்லை.அதே நேரத்தில், ரயில் பாதைகளையும், ரயில்களை இயக்குவதையும் தனியார்வசம் ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்காது.எனவே மத்தியஅரசு இத்திட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என கேட்டுக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |