திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, அண்ணாமலை சொல்கிறார் உங்களுக்கு என்ன தெரியும் என்று? சீனாவில் கொரோனா என்று சொன்னால் சென்னையிலே உடனடியாக கூட்டம் போட்டு, தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார் தளபதி அவர்கள்.
அவரோடு கிறிஸ்மஸ் விழாவிற்கு சென்று விட்டு நான் வருகிறேன்… போகிறபோது காரில் சொன்னார், மழை இல்லை என்று சரியாக விட்டு விடாதீர்கள்… உடனடியாக எடுத்த பணியை முடித்து தர வேண்டும் என்று உடனடியாக சொல்லி, நானும் ஆணையரிடம் சொல்லி…
பணியை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் அந்த பணி தொடர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். நான் இதை ஏன் சொல்கிறேன் என்று சொன்னால்… அண்ணாமலை சொல்வார் தலைவருக்கு என்ன தெரியும் என்று? தன்நிகரில்லா தலைவராக இந்தியா டுடே பத்திரிக்கையில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு முதல் தலைவர் தளபதி என்று அறிவித்திருக்கிற ஒரு மாநிலம் என பெருமிதம் கொண்டார்.