டெல்லியில் மொபைல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வெப் போர்டல் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டு வருவதால் ஊரடங்கை அந்தந்த மாநிலத்தின் முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
சில மாநிலங்களில் தளர்வுகள் சிலவற்றை அறிவித்து வருகின்றன. அதன்படி டெல்லியில் மொபைல் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வெப் போர்டல் மூலம் மதுபானங்கள் ஆர்டர் செய்யலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆர்டர் செய்த மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. செயலிகள், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இந்தியா, வெளிநாட்டு மதுபானங்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யலாம் என அம்மாநில உத்தரவிட்டுள்ளது