விமானத்தில் பயணம் செய்யும் பொழுது முகக் கவசம் அணியவில்லை என்றால் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என விமானத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடைகள் விதிக்கப்படும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்துக்கள், விமான சேவைகள், போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் சென்ற மே மாதம் 25 ஆம் தேதி பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனாலும், விமானங்களில் உணவு வழங்குவதற்கு அனுமதி இல்லை. சர்வதேச விமானங்களில் பயண நேரத்திற்கு ஏற்றவாறு, பேக் செய்யப்பட்ட உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள்நாட்டு விமானங்களில், பேக் செய்யப்பட்ட உணவு-பானங்களை வழங்கவும், சர்வதேச விமானங்களில் சூடான உணவை வழங்கவும் அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.