மற்றவர் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டு குழி பறிக்க நினைப்பவர்கள் அதே குழியில் விழுந்து பலியானார் என்பதற்கு சிறந்த சான்று இந்த கதை
கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒருவனுக்கு அவனுடைய திறமைகளை பாராட்டி அந்நாட்டு மக்களாகிய அவனுக்கு ஒரு சிலை வைத்தார்கள்.அவன் சிறந்த விளையாட்டு வீரன் அவனுடைய விளையாட்டில் அவனுக்குப் போட்டியாக இருந்த இன்னொரு வீரனுக்கு அது பிடிக்கவில்லை. தன்னை கௌரவ படுத்தாமல், எதிரியை புகழ்வது ,அவனுக்கு ரொம்ப பொறாமையா இருந்தது .அவனால் அதை தாங்க முடியவில்லை .என் எதிரிக்கு வைத்த சிலையை நான் எப்படியாவது அழிக்க வேண்டும் என்று சபதம் எடுத்தான்.
எப்படி அதை அழிப்பது என்று யோசித்தான் .ஆனால் தான் அழிப்பதாக என்று யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்தான் .அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது .தினமும் ராத்திரியில் சிலையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க வேண்டுமென்று முடிவு செய்தான் .அப்படியே ஒவ்வொரு நாள் ராத்திரியிலும் தனியாக வந்து ஒரு உழியால் சிலையோட அடிப்பாகத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டினான்.
யாராவது தெரியாமல் இந்த சிலையில் கை வைக்கும் பொழுது அல்லது காற்று பலமாக வீசும்பொழுது ,அதுதானா கீழே விழுந்து உடைக்கிற மாதிரி இருக்கணும் இதுதான் அவனுடைய திட்டம் .ஒருநாள் ராத்திரியில் அவன் சிலையோடு அடிப்பாகத்தை வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது சிலை திடீரென கவிழ்ந்து அவன் தலை மேல் விழுந்தது .சிலை மிக கனமாக இருந்ததால், அவன் தலை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். மற்றவர்களுக்கு நல்லது நடக்கும் பொழுது அதை பார்த்து சந்தோஷப்படும் நபர்கள் தான் கடவுளுடைய பிள்ளைகள் .அவர்களைப் பார்த்து பொறாமைப் பட்டு அவர்கள் நல்ல பெயரை ,புகழையும் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தங்களுடைய அழிவை தான் சந்திக்க நேரிடுவார்கள் .