Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பகைக்காதீங்க…! பாடம் புகட்டிடுவோம்…. ரெடியா இருக்கோம்… பாஜகவை எச்சரித்த வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒரு பாசிச சங்பரிவாரக் கும்பல்கள் வேட்டையாடி கொண்டிருக்கிறான். இமயம் முதல் குமரி வரை ஜனநாயக சக்திகளை வேட்டை ஆடுகின்றான். மிகப்பெரிய எழுத்தாளர்களை, மிகப்பெரிய சிந்தனையாளர்களை, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளை சுட்டு படுகொலை செய்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல்.

அதிகாரபூர்வமாக நீதிமன்ற நீதியரசர்களால்…. இந்தியாவில் 18க்கும்  மேற்பட்ட வெடிகுண்டுகளில் சம்மந்தப்பட்டது ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று நீதிமன்றங்களால் வாதிடபட்ட ஒரு கும்பலின் தலைவனை இந்த நாட்டில் கைது செய்ததாக வரலாறு உண்டா? தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியதாக வரலாறு உண்டா? ஆனால்..

எமது தமிழக அரசே, தமிழக காவல்துறையே எங்களைப் போன்று ஜனநாயக சக்திகள் மீது நட்போடு இருக்கின்ற எங்களைப் போன்றவர்களை பகைத்து கொண்டால் நாளை இந்த பாசிச, வெறிபிடித்த, ஆணவ கும்பலுக்கு இங்கே இருக்கிற எமது ஆயிரம் ஆயிரம் உறவுகள் சரியான பாடம் புகட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் எங்கள் பேராசிரியர் அந்த வழியை தேர்வு செய்யவில்லை. இங்கே திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் இருக்கின்ற கூட்டணி கட்சியின் தலைவர்கள் அந்த வழியை கடைபிடிக்கவில்லை. 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணன் திருமா உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அறைகூவல் விடுத்து இருக்கிற அந்த மனிதசங்கிலி என்பது மனிதநேயத்தை  காப்பதற்காக விடுக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி என தெரிவித்தார்.

Categories

Tech |