ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த கடிதத்தில், அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில்,
ஒன்றிய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி, எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியை பயிற்று மொழியாக வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம் பெற செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதேபோன்று இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திர வித்யாலய பள்ளிகள் உட்பட ஒன்றிய அரசினுடைய அனைத்து கல்வி நிறுவனங்களிலுமே இந்தி மொழியை பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை இருப்பதாகவும், அதை கோடிட்டு காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
இந்த நிலையில் தான் இளைஞர்கள் இந்தி படித்திருந்தால் மட்டுமே வேலைக்கு சென்று பயன்பெறுவார்கள் என்றும், அதேபோன்று ஆள் சேர்ப்புக்கான தேர்வின் போது, கட்டாயமான தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டு இருப்பதை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதியிருக்க கூடிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை அனைத்துமே நமது அரசியல் அமைப்பின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானவை என்றும், நமது தேசத்திற்கு, பன்மொழிக் கட்டமைப்புக்கு தீங்கு விளைப்பதாக அமைந்திருக்கும் என்றும் இந்த கடிதத்தில் பிரதமருக்கு குறிப்பிட்டு இருக்கிறார்.
மிக முக்கியமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தினுடைய எட்டாவது அட்டவணையில், தமிழ் உட்பட 22 மொழிகள் இடம் பெற்றிருப்பது என்றும், இவை அனைத்துமே சம உரிமை கொண்டாடக்கூடிய உரிமை என்றால், இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திய ஒன்றியத்தில் ஹிந்தி பேசுகின்ற மக்களின் எண்ணிக்கை விட, இந்தி அல்லாத மற்ற மொழிகள் பேசுகின்ற மக்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும் போதும் ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென சிறப்பு இருப்பதாகவும்,, தனித்துவம் – பண்பாடு இருக்கிறது. ஆகவே இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளை பாதுகாக்க வேண்டியது அடிப்படையான நோக்கமாக இருக்கிறது.
அதற்காகத்தான் ஆங்கில இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, ஒன்றிய அலுவல் மொழியாகவும், அரசினுடைய அலுவல் மொழியாகவும் நீடித்துக் கொண்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி, அனைத்து மாநில மொழிகளின் உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து வலுவான குரல் கொடுத்து வருகிறது என்றும்,
1965திலே இந்தி எதிர்ப்புக்கு எதிராக, தாய்மொழியான தமிழை பாதுகாத்திட, தமிழ்நாட்டில் வெகுண்டிருந்த மொழி போரில் பல தீரமிகு இளைஞர்கள் தனது இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள் . ஆகவே அவர்களினுடைய உணவுகளை எல்லாம் மதித்து, இந்தியாவினுடைய ஒற்றுமைக்கும், நல்லிணக்க பாதுகாப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு,
பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தி பேச மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழியாக இருக்கும் எனவும், குறிப்பிட்டு இருக்கிறார். ஆகவே இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் முயற்சிகள் நடைபெற்று வருவது நாட்டை பிளவுபடுத்தக்கூடிய தன்மை கொண்டது.
இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாம் தர குடிமக்கள் போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை என்றும், இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தாய் மொழியைப் போற்றும் எந்த மாநிலத்துக்கும் ஏற்புடையதாக இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.
வேற்றுமையில் ஒற்றுமையான தன்னை கொண்ட இந்தியாவில் தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளுமே சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மொழிகளிலும் ஒன்றிய அரசினுடைய அலுவல் மொழி என்ற நிலை எட்டிட வேண்டும். வளமான மற்றும் பல்வேறுப்பட்ட கலாச்சார பண்பு கொண்ட நிலையில், அந்தந்த தனித்தனியான தன்மைகளுக்கு ஏற்ப மொழிகளை ஊக்குவிப்புதான் சரியாக இருக்கும். இது தான் இந்திய துணை கண்டத்தின் பெருமையும், வலிமையும் ஆகும்.
உலக அரங்கில் பலவித பண்பாடுகள், மொழிகள் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு வலுவான எடுத்துக்காட்டாக திகழ்கின்றது என்றும், அதை ஒரே நாடு என்ற பெயரில், இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் அனைத்தையும் கைவிட வேண்டும். இந்திய மக்கள் சகோதரத்துவதுடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு, இந்தியாவுடைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்திடும் என்று அஞ்சுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஒன்றிய அரசினுடைய அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்றும், மிக முக்கியமாக அனைத்து மொழிகளையும் பேசுபவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சமத்துவ – சம வாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிவகைகளை அரசு செய்ய வேண்டும். அதேபோல ரொம்ப மிக முக்கியமான பரிந்துரைகளை தமிழக முதலமைச்சர் வைத்திருக்கின்றார்.
அதில் பல்வேறு வழிகளில் இந்தியை திணிக்கும் வகையில் அமைந்துள்ள, அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் அறிக்கையின் பரிந்துரையை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமை வாய்ந்த இந்தியா ஒற்றுமை சுடரை தொடர்மது ஒளிர்ந்திட செய்திட வேண்டும் என்றும், வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கக்கூடிய ஒரு சூழலில் இந்த பரிந்துரையை அடுத்து கொண்டு செல்லாமல் தடுக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் முதலமைச்சராக வைத்திருக்கிறார்.