Categories
உலக செய்திகள்

எதற்கெடுத்தாலும் பிரிட்டனை மிரட்ட தேவையில்லை.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி..!!

பிரான்சிடம், அடிக்கடி பிரிட்டனை மிரட்ட தேவையில்லை, சரியான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசு பிரிட்டன் அதன் தீவுப்பகுதிகளில், தங்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடவில்லை, என்றால் அந்த தீவுகளுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்தது. பிரிட்டனின் சேனல் தீவுகளில் ஒன்றாக இருக்கும் ஜெர்சி தீவில் மீன் பிடிப்பதற்கு பிரான்ஸின் 47 மீன்பிடி படகுகள் அனுமதி கேட்டிருந்தது.

எனினும், அதில் 12 படகுகளை தான் பிரிட்டன் அனுமதித்தது. இதனால் பிரான்ஸ் அரசு கோபமடைந்தது. பிரான்ஸ் நாட்டிலிருந்து தான் ஜெர்சி தீவுக்கு மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. எனவே 47 படகுகளையும் மீன்பிடிக்க அனுமதிக்கவில்லை எனில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று பிரான்ஸ் பிரிட்டனை மிரட்டியிருக்கிறது.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியதிலிருந்து, பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும்  இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே, பிரான்ஸ், பிரிட்டனுக்கு மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை வழங்குவதை நிறுத்துமாறும் அதிக வரி விதிக்க வேண்டும் என்றும்  ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக ஐரோப்பிய ஒன்றியம், எதற்கெடுத்தாலும் பிரிட்டனை மிரட்ட தேவையில்லை சரியான முறையில் தீர்வு காண முயலுங்கள் என்று பிரான்சிடம் கூறிவிட்டது.

Categories

Tech |