பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஸ்வீட் பேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிக்பாஸ் இரண்டு ஸ்வீட் ஃபேக்டரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று வெளியான ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் விக்ரமனை அசீமிடமிருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.