செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாங்கள் கூட எடப்பாடியை நீக்கிவிட்டோம், கே.பி முனுசாமியை நீக்கிவிட்டோம். எல்லாரையும் நீக்கி விட்டோம். இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தால் இவ்வளவு பேசலாமா ? அன்னைக்கு கூட ஓபிஎஸ் ஐயாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அன்னைக்கு இவ்வளவு ஆணவமாக பேசவில்லையே..
அப்போதுகூட எல்லோரும் ஒன்றிணைத்து அம்மாவுடைய ஆட்சியை மீட்டெடுப்போம் ஒன்றிணைவோம் என்று தான் சொன்னார். ஓபிஎஸ் தப்பா பேசவில்லை. ஆனால் இன்றைக்கு நீங்கள் தீர்ப்பு வந்தவுடன் ஆணவமான பேச்சு பச்சோந்தி என்கிறார், பச்சோந்தி என்று யாரை சொல்கிறார், இவர்தான் பச்சோந்தி. அன்றைக்கு செங்கோட்டை அண்ணண், முத்துசாமி, சேலம் கண்ணன், சசிகலா, தினகரன், அண்ணன் ஓபிஎஸ் வரை எல்லோருக்கும் துரோகம் செய்த நீங்கள் தான் பச்சோந்தி, நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுகின்ற எடப்பாடி தான் பச்சோந்தி.
கே.பி. முனுசாமி ஆவின் இடத்தை குத்தகைக்கு எடுத்து, பெட்ரோல் பங்க் வாங்கியது இவர்தான். இவர் தான் திமுகவோடு கள்ளத்தொடர்பில் இருக்கிறார், இவர்கள் மீது வழக்கு போடக்கூடாது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எல்லா இடத்தையும் திமுகவிற்கு தாரை வார்த்து கொடுப்பது தான் ஒப்பந்தம். இதை எடப்பாடி இடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.