Categories
அரசியல்

அப்படி மட்டும் செய்துவிடக் கூடாது… இஸ்லாமியர்கள் கொந்தளித்து விடுவார்கள்.. போராட்டத்தில் திருமா ஆவேசம்!!

அம்பேத்கரை அவதித்ததற்கு எதிராக விசிக நடத்திய போராட்டத்தில் பேசிய திருமாவளவன், ஒன்றை உங்களுக்கு புரிந்து கொள்வதற்காக…  தெளிவுபடுத்துவதற்காக…. சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் உண்டு. வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அரபு நாடுகளில் மட்டுமல்ல இஸ்லாமியர்கள்… இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் உண்டு. தெற்காசிய  நாடுகளில் இஸ்லாமியர்கள் உண்டு.

மேற்குலக நாடுகளின் இஸ்லாமியர்கள் உண்டு.  இஸ்லாமிய நாடுகளிலும்…  இஸ்லாமிய நாடு அல்லாத பிற நாடுகளிலும்  இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அவர்களிடையே  கலாச்சார மாறுபாடுகள் இருக்கின்றன.உணவு உடை போன்றவற்றிலும் கூட மாறுபாடு இருக்கின்றன. ஆனால் ஒரு விவகாரத்தில் உலகம் முழுவதும் இருக்கிற ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் ஓரணியில் திரண்டு நிற்பார்கள்.  அது என்ன ? அந்த ஒரு விவகாரம் என்ன ? என்பதை என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே…  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நெஞ்சிலே நிறுத்திக் கொள்ளவேண்டும். அந்த ஒரு விவகாரம் என்னவென்றால் ? அவர்களின் இறை தூதுவரான நபிகளுக்கெல்லாம் நாயகமாக விளங்குகின்ற நபிகள் நாயகத்தை யாராவது கொச்சைப் படுத்தினால்?  வரலாற்றை திரித்தால்…  அவருக்கு உருவம் வரைந்தால் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமே கொந்தளிக்கும், குமுறும் ஏன் வரலாற்றை திணிக்கக் கூடாது என்பது தான் கடவுளுக்கு.

ஏன்? வரலாற்றை திரிக்க கூடாது என்பது தான். கடவுளுக்கு  உருவம் இல்லை என்னும் போது,  நபிகள் நாயகத்தையும் – உருவ வழிபாட்டிற்கு உள்ளே அடக்கி விடக் கூடாது என்பது இஸ்லாத்திலே உண்டு. கடவுளுக்கு உருவமில்லை,  நபிகள் நாயகத்திற்கு உருவம் உண்டு. அவர் பிறந்தார்.  மனிதரை போல தான் பிறந்தார். மனிதராக தான் பிறந்தார்.

மனிதராகத்தான் வாழ்தார். மனிதராக தான் மறைந்தார். அவருக்கு உருவம் இருந்தது. ஆனாலும் அவரையும் உருவம் வரைந்து வழிபடக்கூடாது. அந்த  உருவ வழிபாட்டை நோக்கி இஸ்லாம் போய்விடக் கூடாது என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் ஏறத்தாள 1,400 ஆண்டுகளாக இதை கடைபிடித்து வருகிறார்கள்.

அம்பேத்கர் பிறந்து 131 ஆண்டுகள் தான் ஆகின்றன. ஒரு நூறு ஆண்டு தான் கடந்து இருக்கின்றது. நபிகள் நாயகம் பிறந்து, வாழ்ந்து, மறைந்து 14ஆம் நூற்றாண்டு ஆகின்றன. 14 நூற்றாண்டுகளில் ஒருமுறை கூட அவருடைய அடிப்படைக் கருத்தியலுக்கு எதிராக யாராவது திட்டமிட்டு அவதூறு பரப்பினால் அமைதியாக இருந்ததில்லை. கொந்தளித்து எழுவார்கள். ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் உலக நாடுகள் முழுவதும் கொந்தளித்து எழுவார்கள்.

ஏனென்றால் வரலாற்றை திரிக்க  கூடாது என்பது தான்.  உருவ வழிபாடு கூடாது என்பதுதான் அவரது கொள்கை. அதை சொன்னது நபிகள் நாயகம். அதை பரப்பியது நபிகள் நாயகம் அது வரலாறு. அந்த வரலாற்றை திரிக்க  கூடாது. அதற்காக அவர்கள் கொந்தளிக்கிறார்கள். அதை அப்படியே நீங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அரசியலோடு, கருத்தியலோடு பொருத்திப் பார்க்கவேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |