செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள். ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் 20 விழுக்காடு கேட்கிறார். நீங்கள் 10.5 கொடுக்கிறீர்கள். அதை கொடுங்கள், கொடுக்காமல் இருங்கள், ஆனால் அவர் நீண்ட காலமாக வலியுறுத்துகிறார். குடிவாரி கணக்கிடுங்கள் என்று… ஐயா உங்களுக்கு 10.5 வரவில்லை, 8 தானே வருகிறது என்றால்… வாங்கி கொள்வார், எதிர்க்க மாட்டார்.
அதை எடுக்காமல் நீங்கள் வாய் கணக்கு, சும்மா உங்களுக்கு மூணு கொடுத்தேன், உங்களுக்கு நான்கு கொடுத்தேன், உனக்கு 2 கொடுத்தேன், நீ 10 வச்சுக்கோ, நீ 5 வச்சுக்கோ என கூறுவைத்து பழ, காய்கறி வியாபாரம் செய்வதற்கு இது என்ன சமூக நீதி? நாங்கள் கேட்பது இங்கே இருக்கின்ற வெவ்வேறு ஜாதியினருக்கு இல்லை, ஒட்டுமொத்த எல்லா குடிகளுக்குமான நீதிதான் கேட்கிறோம்.
10 பேர் இருந்தால் அதற்குள்ள உணவை அனுப்பு, உரிமையை கொடு. 10,000 பேர் இருந்தால் அதற்கான உரிமையை கொடுங்கள், தலைவாரி எண்ணி கொடு. அப்படித்தான் நடக்கிறது. அது இல்லாமல் நீங்கள் வாயக்கணக்கில் சும்மா அவருக்கு கொடு, இவர்களுக்கு கொடு என்றால் ஏற்படுவது அல்ல. குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.
அதுதான் உண்மையான சமூக நீதி. இல்லை என்றால் அது அநீதி, ஒன்று குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள், இல்லையென்றால் சமூகநீதி என்று பேசுவதை கைவிடுங்கள். பேசிக் கொண்டே இருப்பது சரியில்லை என்பது தான் எங்களுடைய கருத்து என தெரிவித்தார்.