திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்தி மொழி திணிக்கப்படுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்து இருக்கின்றன. ஒரே ஒரு கட்சி அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி. அந்தக் கட்சி ஆதரிக்காதது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இன்னொரு மொழி, இன்னொரு மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை ஏற்க முடியாது என்பதுதான் தீர்மானம். எல்லாவற்றிற்கும் காரணம் தளபதி தான் என்று சொன்னாலும் கூட தளபதி இடுகிற கட்டளையை செவ்வனே நிறைவேற்றுகின்ற அமைச்சர்கள் தான், ஒவ்வொரு அமைச்சரும்… எல்லா அமைச்சர்களுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
அரசு பள்ளியை மூடப்பட்டு விடுமா ? என்கின்ற ஒரு அபாயத்திலிருந்து சூழலில், அதிலிருந்து மாற்றி.. அரசு பள்ளி மாணவர்கள் இன்றைக்கு அதிகமாக வருகிறார்கள் என்று சொன்னால் அது ஒரு சாதனை. இந்து சமய அறநிலையத்துறையே வேண்டாம் அப்படின்னு சிலர் சொல்லுறாங்க. அந்தத் துறை வேண்டியது இல்லை. அந்தத் துறையை எடுத்துட்டு, அதை எங்களிடம் ஒப்படைச்சிருங்க என்று சாமியார்களின் கூட்டம் கோஷம் போட்டுக் கொண்டிருக்கு. சாமியார் கூட்டத்தில் ஒப்படைத்தால் அது என்ன கதிக்கு ஆளாகும் ? அப்படிங்கறது எல்லோருக்கும் தெரியும் என தெரிவித்தார்.