தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டிக் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்கள். ஏன் ? அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு ஓடி விட்டாரா ? அந்த மருத்துவமனை என்னாச்சு ? பட்டத்து இளவரசர் அந்த செங்களையும் தூக்கிக்கிட்டு, சினிமா ஷூட்டிங் நடிக்க போயிட்டாரா ? மருத்துவமனை எங்கே ?
பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. தளபதி இந்த சங்கீஸ் தொல்லை தாங்க முடியலை தளபதி என சொன்னாரு. இப்பதான் நம்ம ஆளுங்க வந்து இருக்காங்க. இப்பவே கதறுனா எப்படி ? இன்னும் டைம் வேற இருக்குது. முதலமைச்சருக்கு என்ன பண்றதுன்னு தெரியல ?
என்னடா அவனுங்க கிட்ட இருந்து தப்பிச்சி ட்ரெயின்ல போலாம்னு பார்த்தா…. இங்கேயும் ஒரு உபி நம்மை பார்த்து தளபதி… இந்த சங்கீங்க தொல்லை தாங்க முடியல, கொஞ்சம் பார்த்து காப்பாத்துங்கன்னு சொல்றாங்க. அந்த அளவுக்கு முதலமைச்சர் பாத்தீங்கன்னா….அந்த அளவுக்கு கிடுக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கின்றார். எங்கேயும் போக முடியாமல்… குடும்பம், மருமகன், மகன், மனைவி இப்படி பண்ணலாம் ? அப்படி பண்ணுங்க ? இங்க கமிஷன் வருதுன்னு… கூடாதுன்னு இன்னொரு பக்கம் நம்ம சங்கீங்க. ஏன் தப்பு பண்றீங்க ? என்ன பண்றீங்க ? ஏன் இப்படி பண்றீங்க ? ஆர்ப்பாட்டம் போராட்டம் டெய்லி நடத்துறாங்க என தெரிவித்தார்.