பிற பகுதிகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தவேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்ப கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் சுற்றுலாப்பயணிகளின் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என தலைமை செயலாளர் அந்த அறிக்கையில் உத்தரவிட்டிருக்கிறார்.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்கள் நிச்சயமாக 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பித்துள்ளது. தனிமைப்படுத்தப்படுபவர்கள் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அதேபோல அரசு வழங்க கூடிய சிறப்பு அனுமதி சீட்டை முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவும் அந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார்.