ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தை வங்கி பண மோசடிகள் மலையா , நீரவ் மோடியுடன் ஒப்பீட்டு அமலாக்கத்துறையினர் வாதங்களை முன்வைத்தனர்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்து முடித்த நிலையில் நேற்றும் இன்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்ட்டு வருகின்றது.
அமலாக்கத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞ்சர் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார். அதில் , ப.சிதம்பரத்தின் மீது நேரடியான பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தப்பிச் செல்ல ப.சிதம்பரம் முயற்சி செய்கிறார். தலைமறைவாக இருந்த சிதம்பரம் அதனால் தான் முன்ஜாமீன் கேட்கின்றார்.அவர் குற்றங்களை செய்ததற்கான அடிப்படை ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. இவர் தொடர்ந்து வழக்கிற்கு ஒத்துழைப்பு வழங்காமல் இதில் இருந்து தப்பித்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் செயல்படுகிறார்.
இவருக்கு எந்த விதமான சலுகைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கி விடக் கூடாது அப்படி வழங்கினீர்கள் என்றால் வங்கி மோசடி வழக்கில் ஈடுபட்டவர்கள் விஜய் மல்லையா , நீரவ் மோடி ஆகியோரின் வழக்கில் இது பாதகத்தை ஏற்படுத்தும்.அந்த வழக்கில் தொடர்புடையவர்களின் இவரைப் போன்றே முன்ஜாமீன் பெற்று சுலபமாக தப்பி விடுவார்கள்.இதன் ஆதாரங்கள் முழுக்க டிஜிட்டல் மையமாக இருப்பதால் ப.சிதம்பரம் விடுதலை ஆக்கினால் அந்த சாட்சியங்களை அழித்துவிடும் அபாயம் இருக்கின்றது.
நாங்கள் அனைத்து தரப்பிலிருந்தும் விசாரணையை முடுக்கி இருக்கின்றோம்.இவரை தொடர்ந்து காவலிலிருந்து வைத்து விசாரிக்க வேண்டும் எனவே இவரின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.ப.சிதம்பரம் சார்பில் இதற்க்கு பதிலளித்து கபில் சிபல் வாதங்களை வைத்து வருகின்றார். அதில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் விசாரணை அமைப்புகள் கொடுத்த பரிந்துரைகள் மற்றும் தகவல் அடிப்படையில் தான் டெல்லி உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க இந்த வழக்கின் விசாரணைக்கு ஆரம்பத்திலிருந்து ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்கினார்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் சிதம்பரம் ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் எதிரான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி இருந்தார்கள்.ஆனால் எந்த ஆதாரங்களும் இல்லாததால் தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதங்களை முன்வைத்தார்.