Categories
அரசியல்

பாஜகவை விடாதீங்க….! ”சீண்டும் கூட்டணி கட்சி” கொம்பு சீவி விடும் திமுக …!!

ரஜினி பாஜகவை கண்டிக்க வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு  வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின்  வேலைக்கான இலவச மின்சாரத்திற்கு ஆபத்து.

திமுக கண்டனம்:

மின்சாரம் தொடர்பான மாநில அதிகாரங்களை அபகரிக்க புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.   மின்சாரம் மின் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு இனி ஆணையத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று குற்றசாட்டியது.

அதிமுக கேளுங்க:

அதிமுக அரசு காயம் ஏற்படாமல் தன்னை காத்துக் கொள்வதற்காக எப்போதும் செய்வதை போல இப்போது ஆமாம் சாமி போட்டு நழுவி விடாமல் இந்த கருப்பு சட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று தனது அறிக்கையில் முக.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். திமுக கண்டனம் சொல்வது ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவும் பாஜகவை எதிர்க்கவேண்டும், கண்டிக்கவேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்தது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்தது.

பாஜகாவை பகைத்த அதிமுக:

இந்தநிலையில் தான் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் இந்த சட்டத்திருத்தம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமையும். மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும். விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம்  கொடுப்பதை தடுக்கும் என்று பாஜகவை கண்டித்தது.

காண்டன பாஜக:

அதிமுக உடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு அதிமுகவின் எதிர்ப்பு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் பாஜக மத்திய பாஜக வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுக பாஜக அவை கண்டிக்கின்றோம், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்க்கிறோம். இதனை அமல்படுத்த கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சி அடையை ஏற்படுத்தியுள்ளது.

இழுத்து விட்ட விசிக:

இந்த நிலையில்தான் தற்போது தற்போது திமுக எடுத்து அதே உத்தியை விடுதலை சிறுத்தை கட்சியும் எடுத்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் அதிமுக அரசை கண்டித்தார். இதற்க்கு, நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்த மத்திய அரசை ரஜினி எச்சரிப்பாரா? மத்தியில் ஆளும் பாஜக அரசைப் பார்த்தும் இதே எச்சரிக்கையை ரஜினி செய்ய வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

கூட்டணி தர்மம்:

விசிக எம்.பி ரவிகுமார் இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பாஜகவினருக்கு ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே அதிமு ஆதரவாக இருந்த நிலையில் திமுக அதிமுக சீண்டி பாஜகவை எதிர்க்க விட்டது. அதேபோல பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வந்த ரஜினியையும் பாஜகவை கண்டியுங்கள் என்று விசிக எம்.பி கூறியுள்ளது திமுகவின் கூட்டணி தர்மத்தை கச்சிதமாக நிறைவேற்றி உள்ளது. இதனால் மத்திய அரசு பாஜக அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Categories

Tech |