தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நாங்கள் 5 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் 3 முறை நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பின் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன் மீதான புகாரை நடிகை சாந்தினி வாபஸ் வாங்கி கொண்டார்.
இதனால் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை சாந்தினி திடீரென முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தார். அப்போது மணிகண்டனின் ஆதரவாளர்களுக்கும் சாந்தினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் அவருடைய காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சாந்தினி மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சாந்தினி என்னை தாக்கிய மணிகண்டன் ஆதரவாளர்களின் மீதும் என்னை ஏமாற்றிய மணிகண்டனின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.