செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பழம்பெருமை வாய்ந்த விக்டோரியா எட்வார்ட் மன்றம் என்பது ஒரு பொது சொத்து. உள்ளே மக்கள் படித்து பயன்பெற நூலகம், திரையரங்கு, அரங்க கூட்டம் நடத்துவதற்கான அரங்கு இதெல்லாம் இருக்கிறது, இதெல்லாம் ஒரு பொதுச்சொத்து. அதுபோக இங்கே பல வணிக நிறுவனங்கள் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது.
இது ஒன்றே முக்கால் ஏக்கரில் உள்ள பொது சொத்து, இதை ஒரு தனியார் நிர்வாகம் கையகப்படுத்திக் கொண்டு பல ஆண்டுகளாக இதில் வருகின்ற வருவாயை முறையான கணக்கு காட்டாமல், முறைப்படி நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்காமல், ஒவ்வொரு முறையும் தேர்தலை அறிவித்து, நடத்தி புது புது உறுப்பினர்களை நியமனம் செய்யாமல்,
தன்னிச்சையாக ஒரே ஒருவர் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, அவருக்கு இசைவாக இருக்கின்றவர்களை வைப்பதும், மற்றவர்களின் நீக்குவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது. இங்கே கடை வைத்து இருக்கிறவர்களே நாங்கள் கொடுத்த முன் பணம் தொகை 8 லட்சம், 1 1/4கோடி, 10 லட்சம் கொடுத்திருக்கிறோம். ஆனால் அங்கே பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட தொகை அப்படி இல்லை, அந்த முறையான கணக்கு இல்லை என்று வருகிறது. இதை பலமுறை பலர் போராடியவர்கள் எல்லாம் நீக்கப்பட்டு வெளியேறி விட்டார்கள், வழக்கு நடக்கிறது.
இதில் என்னவென்றால் முறைப்படி தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர்கள் நியமிக்கின்ற வரை அரசே இடைக்கால நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. உள்ளே என்ன என்ன இருக்கு என பார்வையிடுவதற்கு தான் நான் வந்து இருக்கிறேன், அந்த நூலகத்தை அரங்கை பார்வையிடுவதற்கு, அதற்கு கதவை பூட்டி உள்ளேன் நுழையக்கூடாது என்கின்ற அளவிற்கு காவல் துறையை குவித்து தடுக்க வேண்டிய அவசியம் இல்லை,
அப்படி ஒன்றும் இல்லை. பொது பயன்பாட்டுக்கு தான் நூலகம் இருக்கிறது, அதற்குள்ளே போகக்கூடாது என்று தடுக்கும் போது அதற்குள் என்ன பிரச்சனை இருக்கிறது, உள்ளே சென்று பார்ப்பதில் என்ன பிரச்சனை? அப்போ என்ன நடக்கிறது அங்கே? அப்ப நமக்கு தேவையற்ற சந்தேகங்களை எழுப்புகிறது, உள்ளே சென்று பார்ப்பதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது. இன்றைக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது, தடுத்துட்டீங்க, கதவை போட்டு விட்டீர்கள், காவலர்களை குவித்து விட்டீர்கள் என தெரிவித்தார்.