Categories
அரசியல் தேசிய செய்திகள்

என் பேச்சை கேட்காதீர்கள்…. நீங்களே போய் டீ கடைல கேளுங்க…. மக்களுக்கு எடுத்துக்கொடுத்த ராகுல் …!!

நீங்களே டீ கடை போய் மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள் என பீகார் மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் எப்படி இருக்கின்றது ? என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுச் சந்தை, ஜிஎஸ்டி இவை இரண்டும் பீகார் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது. என்னுடைய இந்தியா எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது இதை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா ? விவசாயிகளுக்கு இந்தியாவில் எப்போது சுதந்திரம் கிடைக்கும். நரேந்திர மோடி இந்தியாவில் என்ன மாற்றம் கொண்டுவரப் போகிறார் ? இதை யோசியுங்கள்.

இந்த சமயத்தில் கொரோனா நோய் பரவி கொண்டிருக்கின்றது. இந்தியா முழுவதும் பயந்து கொண்டிருக்கிறத.  நரேந்திர மோதி 20 நாட்களில் இந்த நோய் முற்றிலும் விலகிவிடும் என்று கூறினார். 20 நாட்களில் இந்தியா கொரோனாவுக்கு விடை கொடுத்து விடும் என்று கூறினார். ஆனால் இந்தியாவில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  செல்போனில் வெளிச்சத்தை கொண்டு வந்து கொரோனவை ஒழிப்பதற்கு வழிவகை செய்தார்கள். கொரோனா விளக்கேற்றுவதால் போய்விடுமா. இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. பீகாரில் உள்ள தொழிலாளர்கள் இந்த நாட்டிலுள்ள பல பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

Countdown 2014: Rahul Gandhi Vs Narendra Modi - The Economic Times

இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்காக தங்களுடைய பங்கை அளித்துக் கொண்டிருந்தார்கள்.நாடு முழுவதும் தங்களுடைய இரத்தத்தையும், வியர்வையையும் சிந்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு நரேந்திர மோடி ஒரு நாள் கூட உதவி செய்யவில்லை.  நாடு முழுவதும் முழு அடைப்பு ஏற்படுவது முழு அடைப்பு கொண்டுவரப்பட்டது. ஏன் பிரதம மந்திரி ஒரு நாள் முன்பே இதைக் கூறவில்லை. ஏன் பிரதம மந்திரி ஒருநாள் அவகாசம் கொடுக்கவில்லை. பிரதம மந்திரி – நிதிஷ்குமார் உங்களுக்கு என்ன செய்தார்கள்.

என்னுடைய மக்களிடம் பீகார் மக்களின் பாக்கெட்டில் யாராவது கையை வைத்து பணத்தை எடுத்தால் பிகார் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள என்பது எனக்கு தெரியும. நீங்கள் வரிசையில் நில்லுங்கள், கருப்பு பணத்திற்கு எதிராக போராடுங்கள் என்று கூறினார்கள் மோடி. உங்களுடைய பணத்தை வங்கியில் செலுத்துங்கள் என்றாரே…! உங்களுடைய பணம் கருப்பு பணமா?  நீங்கள் ஏன் வங்கியில் செலுத்த வேண்டும். அம்பானி, அதானி தங்களுடைய பணத்தை வங்கியில் செலுத்தவில்லை, அவர்களிடம் கூறவில்ல. இந்தியாவில் உள்ள விவசாயிகள்,  வறுமையில் இருப்பவர்கள், ஏழைகள் தங்களுடைய பணத்தை வங்கியில் செலுத்துங்கள் என்றுதான் கூறப்பட்டது.

நீங்கள் நேர்மையானவர்கள், யாராவது உங்களிடம் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கூறினால்  நீங்கள் போராடுவதற்கு தயாராகி விடுவீர்கள். நாட்டிற்கு உதவி செய்ய வேண்டுமென்றால் நீங்கள் உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறீர்கள்.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை நரேந்திரமோடி தங்களுடைய மூன்று முதலாளி நண்பர்களுக்கு அளித்துவிட்டார்.

நீங்கள் என் பேச்சை கேட்காதீர்கள்… நீங்கள் எந்த கடைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஒரு தேனீர் கடைக்கு கூட செல்லுங்கள். நீங்கள் அவரிடம் போய் நரேந்திர மோடி என்ன கொடுத்தார், என்ன செய்தார் என்று கேளுங்கள். இரண்டே இரண்டு விஷயங்கள்தான் ஒன்று ஜிஎஸ்டி, இன்னொன்று பணமதிப்பிழப்பு என்று கூறுவார்கள். 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என ராகுல் காந்தி பேசினார்.

Categories

Tech |