செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒருங்கிணைப்பாளரை அலுவலகத்திற்குள் செல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இவர்களைப் போல் வன்முறையில் தாண்டவம் ஆடுகின்ற செயல்பாட்டில் கட்சியை அழிக்கின்ற விதத்தில் செயல்படக்கூடாது என்பதற்காக அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக, பொறுமையாக, நிதானமாக எந்த சூழ்நிலையிலும் அதிமுகவை, மக்கள் செல்வாக்குள்ள இந்த இயக்கத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பொங்கிய நபர் காடாள்வார், பொறுத்தவர் பூமி ஆழ்வார். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக ஆட்சியை நடத்துவார், அவர் எங்கு இருப்பார் என்பது இன்னும் இரண்டு மூன்று மாத காலத்திற்குள் எல்லோருக்கும் தெரியும். 11-ம் தேதி வன்முறையில் ஈடுபட்டு, கடுமையாக ஆயுதங்களோடு தாக்கப்பட்டவர்கள் காவல்துறையில் கைது செய்யப்பட்டு ஒரு 14 பேர் சிறையில் 15 நாள் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்கள்.
அவருடைய பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர், அவருடைய ஆட்கள் எல்லாம்… அதேபோல 4 மாவட்ட செயலாளர் உட்பட 34 பேர் எடப்பாடியினுடைய ஆதரவாளர்கள் தான் இன்றைக்கு ஜாமீன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணன் ஓபிஎஸ் அண்ணனோடு வருகை தந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் போன்றவர்கள் என அத்தனை பேரும் தான் அவருடைய தாக்குதலுக்கு ஆளானார்களே தவிர, இவர்கள் யாரும் அந்த எண்ணத்திலே செல்லவில்லை. எல்லோரும் எப்பவும் அண்ணன் கூட வருவது போல கட்சி ஆபீசுக்கு வந்தார்கள், தாக்கப்பட்டார்கள் என தெரிவித்தார்.