Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உங்களைத் தான்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்”… சாமியாரின் சுவாரஸ்யமான ஆன்மீக பாதை..!!

தமிழகத்தில் வருடா வருடம் ஒரு சாமியார் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். எடுத்துக்காட்டாக இந்த வருடம் வேலூரில் ஒரு சாமியார் சிக்கியுள்ளார். அவருக்கு ஒரு வித்தியாசமான கொள்கை உள்ளது. என்னவென்றால் அவருக்கு ஆண்கள்தான் மிகப் பிடிக்குமாம். மிகவும் சுவாரஸ்யமான கதை என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் ஸ்ரீ சர்வ மங்கள பீடத்தை நிறுவி அதன் மடாதிபதியாக வலம் வந்தவர் சாந்தகுமார். இதுதான் இவரின் நிஜமான பெயர். இவர் சாமியாராக மாறிய பிறகு சாந்தா சுவாமிகள் என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்டார். ஆரம்பத்தில் ஒரு அரசு வேலையில் இருந்துள்ளார். பிறகு ஸ்ரீபுரம் தங்கக்கோயில் சாமியாரான சக்தி அம்மாவுக்கு சேவை செய்து வேலை செய்து வந்துள்ளார். பிறகு சாமியாரிடம் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு அங்கிருந்து தனியாக பிரிந்து தனியாக ஆன்மீகம் பூஜைகளை செய்து வந்துள்ளார். இவருக்கு பல தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்ததால், செல்வாக்கும் கூடியது.

 

சொகுசு காரில் போய் தான் பூஜைகளையும் செய்வாராம். ஆச்சாரிய சபா என்ற அமைப்பின் தமிழக தலைவராக மூன்று வருடங்களுக்கு முன்பு சாமியாரை நியமித்துள்ளனர். அங்கும் சாமியார் பலரிடம் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமல்ல தன்னிடம் யாராவது வசதியான பக்தர் வந்தால் அவர்களிடம் பிசினஸ் சம்பந்தமாக பேசி அவரிடம் பணத்தை முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக சொல்லி பணத்தை கரந்துள்ளது. ஏமாந்த பக்தர்களும் பணம் கேட்டவுடன் கொடுத்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் சூனியம் வைத்து விடுவேன் கைகளை இழக்க செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இப்படி நான்கு பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இது சம்பந்தமாக புகார் வரவே ராணிப்பேட்டை போலீசார் சாமியாரை கைது செய்துள்ளனர். பின்னர் இவரைப் பற்றி விசாரிக்கும் போதுதான் பல பிரச்சனைகள் வெளியில் வந்தது. சாமியாருக்கு ஆண்கள் தான் அதிகம் பிடிக்குமாம். அவர்களுடன் பாலியல் தொல்லைகள் செய்வாராம். முகநூல் பக்கத்தில், மெசஞ்சரில் பக்தர்களிடம் ஆபாசமாக பேசுவாராம். பாலியல் அழைப்பு விடுப்பார். அப்போது தனது ஆபாச போட்டோவையும் அந்த மெசஞ்சரில் அனுப்புவாராம்.

அதை யாராவது பார்த்து விருப்பமுள்ளவர்கள் வந்தால் அவருடன் நெருக்கமாக இருப்பாராம். ஒருவேளை சாமியாரின் செயலை பிடிக்காதவர்கள் அவர் நம்பரை பிளாக் செய்து விடுவார்களாம். இதுபோன்ற சாமியாரிடம் அப்பாவிகள் சிக்கிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது. ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் விழிப்புணர்வும், போதுமான பகுத்தறிவும் சிலருக்கு தேவையோ என்ற அக்கரை இந்த சம்பவங்கள் நடைபெறும் போது தான் எழுகின்றது .

Categories

Tech |