பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை குறித்து பரவிய செய்தி பொய்யென்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் கூறுகையில், “இன்று எனது தந்தை கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார் என்ற தகவல் பரவிய செய்தி, துரதிர்ஷ்டவசமானது. எனது தந்தை குறித்த தகவல்களுக்கு நானே பொறுப்பு ஆவேன்.
அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்படவில்லை. இப்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கூடிய விரைவில் குணமடைவார் என நாங்கள் நம்புகிறோம். அதனால் தயவுசெய்து, எனது தந்தை குறித்து பரப்பப்படும் எந்தவொரு வதந்தியையும் நம்பாதீர்கள். ஒவ்வொரு நாளும் நான் உரிய மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு, எனது தந்தையின் உடல்நலம் குறித்த தகவலை உங்களிடம் பகிர்கிறேன். அதுவரை, பொறுத்திருங்கள்” இவ்வாறு அவர் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளாார்.