தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக கொரோனா நோய் தொற்று காலத்திலும், தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நாட்டிற்கு முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக நோய் தொற்று, நோய் தடுப்பு பணிகளையும், மருத்துவப் பணிகளையும், மறுவாழ்வு பணிகளையும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைககளையும் சிறப்பாக செய்து வரும் தமிழக அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களும், பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான கொரோனா தடுப்பு பணி மற்றும் பொருளாதார பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு போதுமான நிதி ஆதாரத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு பிந்திய சூழலில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பொருளாதார வல்லுநர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜ் தலைமையில் குழு அமைத்தற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேறியுள்ளது.
தாய்மொழி தமிழ், உலகத்தோடு உரையாட இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கின்றது. எனவே தமிழகத்தின் இரு மொழிக் கொள்கை என்றென்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை என்றும், எந்த மொழிக்கும் அதிமுக எதிரானது அல்ல, எந்த மொழியையும் என் மீது திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று அதிமுக உறுதியாக இருக்கும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் என்ற மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு தகுதித்தேர்வை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பதாகவும், மாநிலங்களில் கல்வி உரிமையை மீட்போம், கிராமப்புற ஏழை எளிய முதல் முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதை தடுக்கும் வகையில் நீட் வகையில் உள்ளதாகவும், நீட் தேர்வு முறையை கைவிடுமாறு மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக செயற்குழு தீர்மானம் நிறைவேற்ற்றியுள்ளது.
நீட் தேர்வு முறை அமல் படுத்தப்பட்ட காரணமாக மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக இப்போது உண்மைகளை மறைத்து விட்டு நீட் தேர்வை காட்டி அரசியல் லாபங்களுக்காக அரசியல் செய்து வருவதாக திமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கி இருக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்டா பகுதியை காவிரி பாதுகாப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்து தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் அழிவில் இருந்து காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திட்டமிட்டவாறு ஜூன் இரண்டாம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து காவிரி நீர் பாசனம் பெறும் அனைத்து விவசாயிகளும் குறுவை சாகுபடி செய்ய வழிவகை செய்த முதல்வருக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் தோற்றம் வளர்ச்சி பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடம் அளிக்க மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபப்பட்டுள்ளது.
கச்சத் தீவை மீட்க வேண்டும், இலங்கை தமிழர் நலன் காக்க வேண்டும், மத்திய அரசு கவனம் செலுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு பாதுகாப்பை உறுதிசெய்ய…. பெண்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க தமிழக அரசு மேற்கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்லகுறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை என மொத்தம் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியதற்கு தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக ஒரு மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று…. ஒற்றுமையாக பணியாற்றி மீண்டும் எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை அமைத்தற்கும், ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியதற்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.