Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம்…! ”யாரும் போகாதீங்க” பலத்த காற்று வீசும்… எச்சரித்த வானிலை ஆய்வு மையம் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பகுதியில்  7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரி கடல் பகுதி  மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கேரள – கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபி கடல் பகுதியில் மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக  மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா  மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கனமழை இருக்க கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |