Categories
மாநில செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு NEWS போடாதீங்க…! கொஞ்சம் கவனிச்சு போடுங்க… அமைச்சர் வேண்டுகோள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த மழைக்கு குறிப்பாக வந்து ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய எல்லா மாவட்டங்களிலும்….  குறிப்பாக கரையோர காவிரி கரையோர மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு,  24 மணி நேரம் பணியில் உள்ளார்கள்.ஒட்டுமொத்தமாக காற்றாலையை  பொறுத்தவரையில் 5,100 மெகாவாட்டு அளவிற்கு உற்பத்தியில் இருக்கிறது,

சோலார் பொருத்தவரையில் 2,400 மெகாவாட் அளவில் உற்பத்தியில் இருக்கிறது, ஹைட்ரோ தேவையின் அடிப்படையில் இயக்குகிறோம்.மழையும் இருக்கிறது, சோலார் உற்பத்தியும் இருக்கிறது, காற்றாலையினுடைய  உற்பத்தியும் இருக்கிறது. நாம் பெரும்பாலும் தெர்மலை குறைத்து விட்டோம். 950 மெகாவாட் தான் தெர்மல் உற்பத்தி செய்கிறோம். நாங்கள் சோலார், காற்றாலையில் அதிக உற்பத்தி வரும் போது தெர்மல் உடைய உற்பத்தியை குறைக்கிறோம்.

குறைக்கும் போது சில யூனிட் ஆஃப் பண்ண வேண்டிய சூழல் வருகிறது. அப்போ என்ன ஆகிறது ? வட சென்னையில் 109 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு என்று செய்த வருகிறது. ஆகவே கேட்டுட்டு எந்த செய்திகளை போடலாம். உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா ?  அல்லது பழுதடைந்து அதனால் உற்பத்தி பாதிப்பா ? என்கிறது வித்தியாசம் இருக்கிறது. சோலார் காற்றாலையின் உற்பத்தி வரும்போது தெர்மல் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அதனால் ஹைட்ரோவும் இயக்க வேண்டிய அவசியம் இல்லை, மழை இருந்தால் கூட தேவையான அளவிற்கு இரண்டிலும் வருகிறது.

சில செய்தி போடும் போது கவனிச்சுட்டு கேட்டுட்டு போடலாம். எங்களிடம் கூட கேட்கலாம். 1200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு என எதோ ஒரு செய்தியில் நான் பார்த்தேன். வரக்கூடிய காலங்களில் கேட்டீர்கள் என்றால் சொல்கின்றோம். தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் காற்றாலையும் சரி, சோலாரும் சரி உற்பத்தி அதிக அளவில் இருக்கிறது.

முழுவதுமாக பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம், எந்த இடத்தையும் காற்றாலையையும் நிறுத்தி வைக்கவில்லை, சோலாரையும் நிறுத்தி வைக்கவில்லை, அது இரண்டும் போக மீதி தேவையான அளவிற்கு தான் 12,300 மெகாவாட் எங்களுடைய தேவை இருக்கிறது. வழக்கமாக உச்சபட்சம் 16,500 வரைக்கும் போகும், இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய இப்ப இருக்கக்கூடிய நுகர்வு என்பது 12,300 மெகாவட்டளவிற்கு பயன்பாட்டில் இருக்கிறது. அதனால் அதற்கு ஏற்றார் போல் தான் மின் உற்பத்தி செய்யபட்டு வருகின்றது என தெரிவித்தார்.

Categories

Tech |