நம்முடைய வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வருகிறோம். ஆனால் குறிப்பிட்ட உணவுப்பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. அப்படி பிரிட்ஜில் எந்த பொருட்கள் வைக்க கூடாது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
துளசி இலை போன்ற மருத்துவ குணம் வாய்ந்தவற்றை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் மூலிகையின் மணமும், மருத்துவ குணமும் குறைந்துவிடும்.
பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை பிரிட்ஜில் வைக்க தேவை கிடையாது. இவை அறை வெப்ப நிலையிலேயே வைத்தால் போதும்.
அதே போல தேனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் போது சில நாட்களில் அதனுடைய சுவை மற்றும் மருத்துவ பயன்கள் போய்விடும். அதேபோல அதனுடைய நிறமும் மாறிவிடும்.
சாக்கலேட்டை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மாறி விடும். அதனால் ஒரு டப்பாவில் போட்டு வைத்து காற்று புகாமல் அடைத்து வைக்க வேண்டும்.
முட்டைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஏனெனில் முட்டைகளை வைப்பதால் முட்டைக்குள் பாக்டீரியாக்கள் நுழைய வாய்ப்புள்ளது.
மேலும் வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் விரைவில் கெட்டுவிடும். அதன் மேல் கரும்புள்ளிகள் வந்து அதனுடைய சுவையே மாறிவிடும்.
அதேபோல பூசணிக்காயும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. பூசணிக்காயை வெளியில் வைத்தாலே போதும்.