Categories
உலக செய்திகள்

இனி இப்படி போடக்கூடாது…மதரீதியான ஆடைக்கு தடை… இந்தோனேசியா போட்ட அதிரடி உத்தரவு…!

இந்தோனேசியாவில் மாணவர்களுக்கு மதரீதியான ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள படங் நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கிறிஸ்துவ மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் பர்தா அணியும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த மாணவி பர்தா அணிய விரும்பவில்லை. ஆதனால் அவரது பெற்றோர்கள் கல்லூரி அதிகாரிகளிடம் பேசி உள்ளனர். இந்நிலையில், வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடையை அணிய கட்டாயப் படுத்தப் படுகின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆகையால் வகுப்பறைகளில் மாணவிகளுக்கு மத ரீதியான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் நதீம் மகழின் தெரிவித்ததாவது, உடைகள் அணிவது அவரவரின் தனிப்பட்ட உரிமையாகும். இது பாடசாலைகளின் முடிவு அல்ல என்று தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இச்சட்டங்களை அகற்றுவதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |