Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு தலையில் சுமத்தாதீங்க…! 30 மாநிலத்தை எப்படி மோடி காப்பாற்றுவார் ? – அண்ணாமலை கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலவசம் கொடுப்பதால் ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலை பற்றி பிரதமர் மோடி சிந்திக்கின்றார்.  மோடிஜி பார்க்கிறார், ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதியை பார்க்கிறோம். இங்கிருந்து 25,000 கோடி மத்திய அரசினுடைய டிஸ்காமுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. அடுத்த வருடம் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி தமிழ்நாடு கடன் வாங்காமல் பட்ஜெட் போட முடியாது.

எல்லா சுமையும் மத்திய அரசினுடைய தலையில் சுமத்துகிறீர்கள், எங்கிருந்து மோடிஜி பணம் கொடுப்பார். இதை ஒவ்வொரு மாநிலமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். மூன்று மாதமாக பேச ஆரம்பித்து விட்டார். எல்லாரும் இறுதியாக முதலமைச்சர்  அப்பாயிண்ட்மெண்ட் வாங்குகிறீர்கள், இரண்டு பைலை தூக்கிக்கொண்டு போகிறீர்கள், பேப்பரை கொடுக்கிறீர்கள், பத்திரிக்கை முன்னாடி,

தமிழ்நாட்டில் வீரவசனமாக டயலாக் பேசுகிறீர்கள், டெல்லி போனதும் ரூமுக்குள் சொல்கிறீர்கள்…  எங்களிடம் நிதி இல்லை, எங்களை காப்பாற்றுங்கள் என்று…. எப்படி ஒரு பிரதமர் இந்தியாவில் இருக்கக்கூடிய 30 மாநிலத்தை எப்படி காப்பாற்றுவார், ஒரு பக்கம் ஃபெடரல் கட்டமைப்பு இல்லை என்கிறீர்கள், ஒரு பக்கம் மாநில உரிமை என்கிறீர்கள், ஒரு பக்கம் மாநிலத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. எல்லாமே ஒரு லிமிட் தான், எப்படி ஒரு அரசாங்கம் ஆதரவு கொடுக்கும்? என கெளப்பிவி எழுப்பினார்.

Categories

Tech |