சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படத்தை விட ஒரு பெரிய அரசியல் இருக்காங்க. சினிமா என்கிறதே அரசியல் தாங்க. சினிமாவே அரசியல் தான். நீங்க பேசல, அதில இருந்து வந்தவங்க தான் இவ்வளவு பேரும். பேரறிஞ்சர் அண்ணா திரைப்படத்தின் கதை, வசனம். ஐயா கலைஞர் அவர்கள் தயாரித்திருக்கிறார், எழுதி இருக்காரு. அதுக்கு பிறகு ஐயா எம்ஜிஆர் அவர்கள், அம்மையார் ஜெயலலிதா அவர்கள், ஐயா விஜயகாந்த் அவர்கள், அண்ணன் கமலஹாசன் அவர்கள் எல்லாருமே ..
அது வேண்டாம் அது வேண்டாம் என்னைக்கு அரசியல் சாக்கடைன்னு நீங்க மூக்க பொத்திட்டு போனாலும், 300 ஆண்டுகள் ஆனாலும் நாறிக்கொண்டு தான் இருக்கும் என் உடன் பிறந்தார்களே….. மூழ்கி எடுத்து எவனாவது, ஒருத்தன் சுத்தம் செய்யணும். அது யாருன்னு நீங்க முடிவு பண்ணனும் ? சுத்தம் சுகம் தரும் என்று எல்லா சுவத்துலயும் எழுதிருக்கு. எழுதுறது எளிய. அதை எழுதற நேரத்துக்கு கூட்டியிருந்தா தெருவு சுத்தமாயிருக்கும்.
ஒவ்வொரு தெருவும் சுத்தமா இருந்தா தேசம் சுத்தமா இருந்திருக்கும். அதை செய்யறது யாரு ? அப்படிங்கறது தான் இங்க பிரச்சனை. இததான் வள்ளுவன் சொல்றான்… சொல்லுதல் யாருக்குமே எளிய அரியவாம் சொல்லியவர் தம் செயல் என அதை சேகுவாரா வேற வடிவில் சொல்கிறான்.. சொல்லுக்கு முன் செயல் என்று, எங்க தலைவர்… செயலே சிறந்த சொல்லுங்கிறாரு.
முதல்ல செயல செய்யணும். அத விட்டுட்டு சும்மா பேசுறதுக்கு அஞ்சிகிட்டு, அதுக்கு பயந்துகிட்டு, தியேட்டர் தர மாட்டோம்… தரலன்னா போறான். எத்தனை நாளைக்கு இந்த அதிகாரம் ஒருத்தன் கிட்ட இருக்கும். எத்தனை நாளைக்கு இருந்திர போது. அஞ்சுவதும், அடிபணிவதும் தமிழன் பரம்பரைக்கே கிடையாது.
அது இருக்கக் கூடாது. துணிஞ்சு நிக்கணும். எதையும் எதிர்த்து பேசணும். எதுக்குமே பயப்பட மாட்டேன். எதுக்கு பயப்படனும் ? கொலை செய்றவன், கொள்ளை அடிக்கிறவன், திருடுறவன், ஊரான் சொத்த திருடுறவன், கோடிக்கணக்கான லஞ்சம் வாங்குறவன்., இவனே பயப்பட மாட்டேங்குறான்…
நாம உண்மையா, நேர்மையாய் இருக்கிறவன், இதெல்லாம் எதிர்க்கிறவன், நம்ம எதுக்கு பயப்படனும் ? நல்லவன் ஏன் பயப்படனும்? கெட்டவனே பயப்படாம சுத்தும்போது, நல்லவன் எதுக்கு பயப்படனும்? படம் என்பது பொழுது போக்கல்ல. பொழுது… நீங்க சும்மா இருந்தாலே போய்ரும். பொழுதை… நல்ல பொழுதாக ஆக்குறது தான் கலை இலக்கியத்தின் வேலை. அப்படிப்பட்ட கலையை கலைஞர்களை உருவாக்குவது நம்முடைய கடமை. அதற்கான காலம் வரும், அப்போ திரையுலகம் மறுமலர்ச்சி அடையும். அத நீங்க பாக்க தான் போறீங்க. அது நடக்கத்தான் போகுது என தெரிவித்தார்.