ஓபிஎஸ் அவர்களால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், எடப்பாடி அணி கொள்ளை கூட்டணி என விமர்சித்தது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,
கோபத்தில் பேசுபவர்களை பற்றி நாம் பேச வேண்டாம். கோபத்தில் பேசுபவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம். அரசியல் பூர்வமான கருத்துக்களை பேசுவோம். இங்கிருந்து போனவர்கள்; இந்த கட்சியில் இப்போது இல்லை. அந்த கோபத்தில் பேசுபவர்களுக்கு கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. நாட்டு நடப்பை பற்றி பேசுங்கள்; இதிலிருந்து பிரிந்து சென்றவர்களை பற்றிய அண்ணா திமுக பிரச்னை பற்றியே திரும்ப திரும்ப பேசுறீங்க.
கடந்த ஒரு மாதமாக அண்ணா திமுக கட்சியை பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள். நாட்டு மக்களுக்கு என்ன தேவை ? இந்த நாட்டிற்கு திமுக ஆட்சிக்கு ஒன்றை வருஷம் ஆச்சு, இந்த ஆட்சிக்கு வந்து, இந்த அரசு என்ன செய்திருக்கிறார்கள் ?தமிழக அரசு தான் இந்தியாவிலேயே முதன்மையான அரசு என்று சொல்கிறார்கள். எந்த வகையில் முதன்மையான அரசு. வரும் போதே… மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு என மக்கள் சந்திக்கும் பிரச்சனையோ தொடர்பான குரல் கேட்டது.
மக்களுக்கு அது தருகிறேன்; இது தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டு வந்தீர்கள். அதைப்பற்றி கேட்க மாட்டீர்கள். உள் கட்சி பிரச்சினைகளை பற்றிய பேசிக் கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்?அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது, அதற்குள் மக்களை சந்தித்தாக வேண்டும், மக்களுக்கு கொடுத்த திட்டங்களை செய்ய வேண்டும், மாதம் மாதம் மின் கட்டணம் எடுக்கிறோம் என்றார்கள் எடுத்தார்களா? வீட்டு வரி உயர்வு செய்ய மாட்டோம்;
பொருளாதாரத்தை மேம்படுத்திய பிறகு தான் உயர்த்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். இந்த மாதிரி பிரச்சனையை பேசுங்கள். நாட்டு மக்கள் இன்றைக்கு கொதித்துப் போய் இருக்கிறார்கள் அதை பற்றி பேசுங்கள். சும்மா திரும்ப திரும்ப அதிமுக பற்றி பேசி குண்டா சட்டிக்குள்ள குதிரை ஓட்ட பாக்குறீங்க என தெரிவித்தார்.