தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் ,பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அவர் பேசியதாவது, நான் விஜய் சாரை சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்ற போது அவரே என்னை உபசரித்து வரவேற்றார். நான் அவரிடம் கதை கூறும் போது ஒரு இடத்தில் கூட இடையில் பேசாமல் கவனத்தோடு கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் எனக்கு பயத்தில் உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. இதை கவனித்த விஜய் சார் ஏசியை அதிகரித்தார். நான் கதை கூறி முடித்த பிறகு சில நிமிடங்கள் சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து படம் பண்ணலாம் என்று ஒரு வார்த்தை மட்டும் கூறினார். அது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஒரு மிகப்பெரிய ஸ்டார் நான் கதை கூறிய உடன் ஒப்புக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.