Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதாரணமா சொல்லாதீங்க…! ”கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்” தரமான பதிலடி …!!

தமிழகத்தில் கொரோனா சோதனை குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்கும் போது, ( ஸ்டாலின் கருத்து: பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?) என்ற கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்தார். அதில், டெஸ்ட் குறைவா இருக்குது, அது போலியான தகவல் அப்படின்னு சில வார்த்தைகளை பேசுறது மனதிற்கு வேதனை அளிக்கக்கூடிய செயலாகும்.

ஊண் உறக்கம் இன்றி:

மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள்,  அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக உணர்வோடு கிட்டத்தட்ட பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இதுவரைக்கும் 108 நாள், நான்காவது மாதமாக தொடர்ந்து ஊண் உறக்கம் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். ஆய்வகத்தில் RT-PCR  உடனே பாக்குற மாதிரி சாதாரண டெஸ்ட் கிடையாது. 10 மணி நேரம் இந்த டெஸ்ட்டை ரன்  பண்ணனும். N 95 மாஸ்க் (முழு முக கவசம்) போட்டு,  PP போட்டு, மிகுந்த பாதுகாப்போடு பணி செய்கிறார்கள்.

இது சங்கிலி தொடர்:

ஒருவர் இருமினால், தும்மினால் நோய் தொற்ற்றை ஏற்படுத்தும் வைரஸை பாதுகாப்போடு கையில் எடுத்து அதில் இருக்கக்கூடிய RNAவை பிரித்தெடுத்து, ஒவ்வொன்றாக பார்த்து, 6 மணி நேரம் ரன் பண்ணி, கிராப்பை பார்த்து அதுக்கு அப்புறமா போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது மிக மிகக் கடினமான பணி. இது சங்கிலி தொடர் மாதிரி. ஒருவர் டிரான்ஸ்போர்ட் மீடியாவை கொண்டு வரணும்னு. ஒருவர் டெஸ்டை ரன் பண்ணனும். ஒருத்தர் ரிசல்ட் பார்த்து சொல்லணும். ஒரு ஆளுபோர்டலில் பதிவேற்றம் செய்யவேண்டும்( ICMR என்ற ”STOP CORONA” என்ற இணைய) பதிவேற்றம் செய்யவேண்டும்.

100%  பதிவேற்றம்:

யார் வேண்டுமானாலும் இன்னைக்கு சோதனை எவ்வளவு என்று பார்த்துக் கொள்ளலாம். ஒன்றை கூட மறைக்க  முடியாது. 100%  RT-PCR டெஸ்டை பதிவேற்றம் செய்கிறோம். இந்தியாவிலேயே இது ஒரு மகத்தான சாதனை. இவ்வளவு டெஸ்ட் எடுக்க கூடிய கெப்பாசிட்டியை மருத்துவத்துறை பெற்றிருக்கிறது என்றால் அது தமிழகத்தின் மகத்தான சாதனை. அதனால இவ்வளவு கண்ணும், கருத்தும் ஆய்வகத்தில் பணிபுரியக்கூடிய லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான கருத்து:

ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லலாம், விமர்சனங்கள் என்ற பெயரில் தயவு செய்து அவர்களை பழி போடுவது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இந்த பொதுவான கருத்து தெரிவிக்கின்ற போது,  உடனடியாக அதற்கு எதிர்மறையான கருத்துக்கள் என்று இல்லை. இந்த மாதிரியான நேரத்தில எதிர்மறையான கருத்துக்களுக்கு இடம் இல்லை.

சரியான பாதை:

இது ஒரு அவசர நிலை,  இன்றைக்கு உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்குதல். இதை இன்றைக்கு கிராமத்தில் இருந்து நகரம் வரை முழு ஈடுபாட்டோடு, ஒட்டுமொத்த அரசு எந்திரமும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில்  மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் எல்லாம் முழுமையாக இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர்விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Categories

Tech |