Categories
அரசியல் மாநில செய்திகள்

இலவசம்னு சொல்லாதீங்க…! அம்மா தான் பெயர் வச்சாங்க… கண்டிப்பா அதுலாம் வேணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சத்துணவு கிட்டத்தட்ட உலகத்தினுடைய ஐநாவின் உடைய ஒருமதிப்பிட்டில் அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 134 குழந்தைகள்  பிறக்கிறது என்றால்,  134 குழந்தைகள் இறக்குமாம். ஆனால் சத்துணவு திட்டம் வந்த பிறகு, புரட்சித்தலைவர் திட்டம், அதே போல கர்ப்பிணி பெண்களுக்கு வந்து சத்துணவு கொடுப்பது அந்த திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் 134 குழந்தைக்கு பதிலாக 38 குழந்தைகள் தான் இறந்தது.

அப்போது இதெல்லாம் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, ஒரு சமூக ஏற்றம்,  அதேபோல எல்லா வகையிலும் நம்முடைய பெண்களுக்கும்,  குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். அம்மாவை பொருத்தவரைக்கும் என்ன செய்தார்கள் ? இலவசம் என்று சொன்னால் மக்களை கௌரவ குறைச்சலுக்கு நாம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும். இலவசம் என்று சொல்லக்கூடாது. விலையில்லா மிதிவண்டி, விலை இல்லா லேப்டாப், தாலிக்கு  தங்கம்.

இன்றைக்கும் தமிழ்நாட்டு மக்களால் பேசப்படுகிறது, உதாரணத்திற்கு விலையில்லா என்று சொல்லும் போது லேப்டாப், லேப்டாப்பை பொறுத்தவரையில் எவ்வளவு பயன்பட்டது கொரோனா காலகட்டத்தில்… அம்மாவுக்கு தெரியுமா கொரோனா வரும் என்று ? தெரியாது. ஆனால் கொரோனா வந்ததினால் கிட்டத்தட்ட வருடத்திற்கு 5 லட்சம் லேப்டாப் கொடுத்து, 50 லட்சம் லேப்டாப் எல்லோரும் வைத்திருந்தார்கள், அதெல்லாம் அந்த காலத்தில் பயன்பட்டது. லேப்டாப் மூலமாக கல்வி கற்பதற்கு. அந்த மாதிரியான திட்டங்கள்  வேண்டும், விலையில்லா திட்டங்கள் வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |