கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேபாளம், பங்களாதேஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவில் சானிடைசர் போன்ற விஷயங்கள் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு சானிடைசர் (கிருமிநாசினி)யை ஏற்றுமதி செய்ய முழுமையாக தடைவிதித்துள்ளது. ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிரிமிநாசினியின் தேவை இந்தியாவில் அதிகளவு தேவை இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நாடுமுழுவதும் ஊரடங்கு தளர்வில் பல பகுதிகளில் நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்து விட்டன. ஏராளமானோர் பணிக்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். கட்டுப்பாடு தளர்வும் படிப்படியாக அமலாக இருக்ககூடிய நிலையில் அனைவரும் வேலைக்கு, பொது இடங்களுக்கு வருவார்கள் எனவே கிருமிநாசினி தேவை அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.