”முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆவேஷமாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர்.
இந்த விவாதத்தில் காஷ்மீர் மாநில மக்களவை பரூக் அப்துல்லா பற்றிய தகவல் ஏதும் இது வரை தெரிவிக்கப் படவில்லை. அவரை காணவில்லை. அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.மக்களவை உறுப்பினர்ஃபரூக் அப்துல்லா எங்கே? என்றெல்லாம் கேள்வி எழுப்பபட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய , தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில் , ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது.முஸ்லிம் மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளியுங்கள்.முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்.எனது மகன் உமர் அப்துல்லா சிறையில் வைக்கப்பட்டுள்ளார்நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலை அமித்ஷா கொடுத்திருக்கிறார் நீதிமன்றத்தை நாட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.