கட்சி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் .
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது.
இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும் அதனால் ஆலோசனை உடனடியாக எடுப்பதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் அதனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு ஒற்றை தலைமை ஆளுமை திறன் கொண்ட ஜெயலலிதாவைப் போல் ஆளுமைத் திறன் கொண்ட ஒற்றை தலைமை தேவைப்படுகிறது என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இது கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல்வரும் ,துணை முதல்வரும் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து இவ்வாறு கூறியுள்ளனர், தேர்தலுக்கான தோல்வி குறித்தும் ,கட்சி முரண்பாடுகள் குறித்தும், கட்சியை பற்றிய உங்களுக்கான பார்வைகள் குறித்தும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைவர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
கட்சி குறித்த கருத்துக்களை பதிவிட பொதுக்குழு செயற்குழு என பல இடங்களில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவெளியில் கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளனர்.