Categories
அரசியல் மாநில செய்திகள்

தளபதிய சீண்டாதீங்க…. ”நாங்க உங்களை எதிர்ப்போம்”- திருநாவுக்கரசர்

ஸ்டாலினை விமர்சிப்பவர்களை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை மற்ற கட்சியினர் விமர்சிக்கும்போது, தோழமைக் கட்சிகள் மௌனம் காப்பதாக கேஎன் நேரு ஆதங்கப்பட்டிருந்தார். இவ்வாறு சொல்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது.

Image result for thirunavukkarasar STALIN

ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தால் அவரது கட்சித் தலைவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் உடனுக்குடன் பதிலளித்துவிடுகிறார்கள். திமுகவுக்கு என்று தனிப் பத்திரிகை, சேனல்கள் உள்ளதால் பதிலடி கொடுத்துவிடுகிறார்கள். இதேபோன்ற அக்கறை தோழமைக் கட்சியான காங்கிரஸுக்கும் உண்டு. ஸ்டாலினை விமர்சிப்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். நேருவின் ஆதங்கம் நியாயமானதுதான்” என்று கூறினார்.

Categories

Tech |