Categories
மாநில செய்திகள்

உண்மை அறியாமல் பேச வேண்டாம்…கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம்..!!

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கிரண்பேடி பதிவிட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. பிரச்சினை எங்கே?

பதில் : மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட முக்கிய காரணமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Image result for admk valarmathi

இந்நிலையில் அதிமுக இலக்கிய துணைச் செயலாளர்  வளர்மதி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் தென்னிந்தியா முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சமும் ,வறட்சியும் நிலவி வரும் இவ்வேளையில் புதுவை ஆளுநர் கிரண்பேடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது வேதனையை அளிக்கிறது என்றும் , உண்மையை உணராமல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கிரண்பேடி அவர்கள் பதிவிட்டு  இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்திருந்தார்.

தண்ணீர் பிரச்சனையை போக்குவதற்காக அதிமுக இரவு பகல் பாராது உழைத்து வருகிறது அவ்வாறு இருக்கையில் இப்படி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டது மிகவும் தவறானது, உயரிய பதவியில் இருப்போர் இவ்வாறு பொருத்தமில்லாத பதவிகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |