Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய்யான தகவலை பரப்பாதீங்க ….! சோனியா காந்தி மீது வழக்கு பதிவு …!!

ட்விட்டர் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவலை பரப்பியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மீது கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையில் பி.எம்.கேர் பண்ட் எனும் பிரதமரின் சிறப்பு நிதி குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சோனியா காந்தி அவர்களுக்கு பிரத்யேக ட்விட்டர் கணக்கு இல்லாததால் சம்பந்தப்பட்ட கணக்கை சோனியாகாந்தி இயக்குவதாகவும், அதிலிருந்து பிரதமரின் சிறப்பு நிதி குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளன. மேலும் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன் என்பவர் இந்த வழக்கை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |