தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.20,050 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்