பிரபல காமெடி நடிகர் யோகி பாபு தற்போது தாதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எனி டைம் மனி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் சத்யா ஹீரோவாக நடிக்க, காயத்ரி, நாசர், மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தாதா படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆனால் நான் தான் ஹீரோவாக நடித்தது போன்று விளம்பரப்படுத்துகிறார்கள் என்று யோகி பாபு குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தாதா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கின்னஸ் கிஷோர் பேசியிருக்கிறார்.
இந்த படம் 9-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், யோகி பாபு 4 சீனில் நடித்திருக்கிறாரா அல்லது 40 சீன்களில் நடுத்திருக்கிறாரா என்பதை ஊடக நண்பர்கள் பார்த்து சொல்ல வேண்டும். நான் யோகி பாபுவிற்கு பலவிதத்தில் உதவி செய்துள்ள நிலையில், அந்த நன்றி கூட இல்லாமல் அவர் நடந்து கொள்கிறார். அதன் பிறகு 4 சீனில் மட்டும் அவர் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன். இதை யோகி பாபு 40 சீனில் நடித்திருந்தால் சினிமாவை விட்டு அவர் விலகி விடுவாரா? என் படத்தை வியாபார நோக்கத்தில் வாங்க வந்த அனைவருக்கும் யோகி பாபு போன் செய்து படத்தை வாங்காதீர்கள் என்று கூறி வியாபாரத்தை கெடுத்து விட்டார்.
என்னுடைய அடுத்த படத்திலும் யோகி பாபு நடிப்பதாக கூறி பணம் வாங்கிய நிலையில் அந்த படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்ததோடு வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே என்னுடைய படத்தில் நடிக்காதவர் வேறு எந்த படத்தில் நடிக்க கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள் என்றார். மேலும் இயக்குனர் கின்னஸ் கிஷோரின் பேச்சால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.